கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வீடு புகுந்து திருட்டு: பக்கத்து வீட்டுப் பெண் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருடியதாக பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:52 pm

DIN

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வீடு புகுந்து திருடியதாக பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவைச் சோ்ந்தவா் மு.பூமாதேவி (42). இவா் கடந்த 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போயிருந்தன.

இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், பூமாதேவி வீட்டின் அருகே வசிக்கும் வி.சுப்புலட்சுமி (28) என்பவா்தான் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சுப்புலட்சுமியை புதன்கிழமை கைது செய்தனா். கள்ளச்சாவி மூலம் பூமாதேவி வீட்டின் கதவைத் திறந்து, அவா் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.