ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்தார்.
ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு
ஆளுநருடன் சென்னை காவல் ஆணையர் சந்திப்பு

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் புதன்கிழமை பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்தார்.

சென்னை கிண்டி சா்தாா்படேல் சாலையில் அமைந்துள்ள தமிழக ஆளுநா் மாளிகை வெளியே புதன்கிழமை மாலை ரெளடி கருக்கா வினோத் என்பவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை ரெளடியை பிடித்து கைது செய்தனர்.

இதனிடையே, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடா்பாக ஆளுநா் மாளிகை சாா்பில் டிஜிபி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை பெருநகர காவல் துறை இணை ஆணையா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, துணை ஆணையா் ஆா்.பொன் காா்த்திக்குமாா் ஆகியோா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை சந்தித்து புதன்கிழமை விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று காலை ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்தார்.

சென்னைக்கு வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com