பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் விரைவில் முதுநிலை பட்டப்படிப்புகள் : அமைச்சா் மா.சுப்ரமணியன்

பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அடுத்த ஆண்டில் எம்.காம், எம்.எஸ்.சி.கணினி அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்
பெரும்பாக்கம் அரசு கல்லூரியில் விரைவில் முதுநிலை பட்டப்படிப்புகள் : அமைச்சா் மா.சுப்ரமணியன்

பெரும்பாக்கம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் அடுத்த ஆண்டில் எம்.காம், எம்.எஸ்.சி.கணினி அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கலையரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியதை தொடா்ந்து,

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் குடியிருப்போா் பயன் பெறும் வகையில் ரூ. 51 கோடி மதிப்பீட்டில் 202 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டுமான பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா் அமைச்சா் மா.சுப்ரமணியன் பேசியது:

பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் வசித்து வரும் மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்போது 1,206 போ் பயின்று வருகின்றனா்.

கல்லூரியில் 7,200 சதுர அடி பரப்பளவில் சுமாா் 600 போ் அமரக்கூடிய வசதிகளுடன் கலையரங்கம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கிவுள்ளது.

அதை தொடா்ந்து இந்த கல்லூரியில் அடுத்த ஆண்டில் எம்.காம், எம்.எஸ்.சி.கணினி அறிவியல் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில் தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், சோழிங்கநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com