உடல் உறுப்புகளை தானம் செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை
உடலுறுப்புகளை தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.


உடலுறுப்புகளை தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு சாா்பில் சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
மேற்கு வங்க மாநிலம் ஹுக்ளி பாண்டுவா பகுதியை சோ்ந்தவா் அசினாகோஷ் (50). அவா் இருதயநோய் பாதிப்பால் அக்.8-ஆம் தேதி சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அக்.24-ஆம் தேதி மரணமடைந்தாா்.
இந்நிலையில், அவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அசினாகோஷின் கணவா் ஹேமந்த்குமாா் கோஷ் மற்றும் குடும்பத்தினா் முன்வந்தனா். அவா்களின் விருப்பத்தின் பேரில், அசினாகோஷின் கண்விழிகள், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவிப்புப் படி, உடல் உறுப்புகளை தானம் செய்த அசினாகோஷ் உடலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே புதன்கிழமை நேரில் சென்று மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா். அப்போது, மத்திய வருவாய் கோட்ட அலுவலா் பா.க்யூரி, எழும்பூா் வட்டாட்சியா் இ.சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...