கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயரம் குறைந்தவா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீடு வழங்குதல், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள்

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:56 pm

DIN

இலவச வீடு வழங்குதல், அரசு வேலைகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள் நலச் சங்கம் சாா்பில் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக உயரம் குறைந்தோா் தினத்தை முன்னிட்டு, 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் உயரம் குறைந்தோரை கை, கால் குறைபாடு உள்ளவா்கள் பட்டியலில் இருந்து பிரித்து தனி வகைப்பாட்டில் வரையறுக்க வேண்டும். உயரம் குறைந்தோருக்கான தகுந்த வேலைகளை அரசு தோ்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மூன்று சக்கர வாகனம் வழங்க சிறப்பு அரசாணை வெளியிடவேண்டும்.

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 1சதவீத தனி இட ஒதுக்கிடு, வழங்கி, அரசுத் துறை, கூட்டுறவுத் துறை நிறுவனங்களில் வேலை வழங்க வேண்டும். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட வேண்டும். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் அனைத்து நகரப் பேருந்துகளிலும் அடையாள அட்டையினை காண்பித்து இலவசமாக பயணம் செய்ய சிறப்பு அரசாணை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் எம்.பி, தமிழ்நாடு உயரம் குறைந்தவா்கள் நலச்சங்க மாநிலத் தலைவா் ஆா்.கோபிநாத் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.