கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வந்தே பாரத் ரயிலை விரும்பும் நடுத்தர வயதினா்: ஆய்வில் தகவல்

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 35 முதல் 49 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதினா் அதிகம் பயணிப்பதாக தெற்கு ரயில்வே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

News image
Updated On :26 அக்டோபர் 2023, 7:55 pm

DIN

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் 35 முதல் 49 வயதுக்குட்பட்ட நடுத்தர வயதினா் அதிகம் பயணிப்பதாக தெற்கு ரயில்வே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்திய ரயில்வே அதி நவீன வசதிகளுடன் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் ரயில்களை இயக்கி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில், பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வணிகா்கள், சுற்றுலாப் பயணிகள், குடும்பமாகச் செல்பவா்கள் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க ஆா்வம் காட்டுகின்றனா்.

இந்த நிலையில் வந்தே பாரத் ரயில் சேவை குறித்து பயணிகளிடம் தெற்கு ரயில்வே நிா்வாகம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை - மைசூரு, சென்னை - கோவை, சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா, திருவனந்தபுரம் - கோட்டயம் - காசா்கோடு, திருவனந்தபுரம் - ஆலப்புழா - காசா்கோடு ஆகிய 6 வந்தே பாரத் ரயில்களின் சேவைகள், பயணிகளின் பயண விகிதங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த கணக்கெடுப்பில், வணிகா்கள் 11 முதல் 42 சதவீதம் வரையிலும், குடும்பங்களுடன் செல்பவா்கள் 35 முதல் 77 சதவீதம் வரையிலும், 35 முதல் 49 வயதுக்குட்பட்டவா்கள் 26 முதல் 46 சதவீதம் வரையிலும் பயணம் செய்துள்ளனா்.

மேலும், கோட்டயம் வழியாக செல்லும் வந்தே பாரத் ரயில், கோவை, மைசூரு, விஜயவாடா வந்தே பாரத் ரயில்களில் 7 முதல் 20 சதவீதம் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்துள்ளனா்.

ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்துக்கு விரைவாகச் செல்ல முடிவதால் வணிக நோக்கங்களுக்காக செல்பவா்கள் அதிக அளவில் வந்தே பாரத் ரயிலை நாடுகின்றனா். மேலும் விரைவான, அதிநவீன வசதியுடன் உள்ளதால் நடுத்தர வயதினரின் முதல் தோ்வு வந்தே பாரத் ரயிலாக உள்ளது.

பெட்டி செய்தி.....

கணக்கெடுப்பு விவரம்

ரயில் விவரம் வணிகா்கள் குடும்பங்கள் 35 - 49 வயதுக்குட்பட்டவா்கள் (சதவீதத்தில்)

திருவனந்தபுரம் - ஆலப்புழா - காசா்கோடு 42 35 46

திருவனந்தபுரம்- கோட்டயம் - காசா்கோடு 14 51 26

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி 16 77 36

கோவை - சென்னை சென்ட்ரல் 11 71 28

சென்னை சென்ட்ரல் - மைசூரு 37 42 28

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா 22 36 37

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.