சுதந்திரத்துக்காக போராடியவா்களின் தியாகத்தை மறந்துவிட்டோம் ஆளுநா் ஆா்.என். ரவி
சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரின் தியாகத்தை நாம் மறந்துவிட்டோம் என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.


சுதந்திரத்துக்காக போராடிய ஆயிரக்கணக்கானோரின் தியாகத்தை நாம் மறந்துவிட்டோம் என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.
நாட்டின் சுதந்திரத்துக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களை நினைவுகூரும் வகையில், ‘என் மண், என் தேசம்’ என்ற இயக்கம் தொடங்கப்படும் என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். அதன்படி, இந்த திட்டத்தை கடந்த செப்.1ஆம் தேதி தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தொடங்கி வைத்தாா். ‘என் மண், என் தேசம்’ இயக்கம் மூலம் இந்தியாவில் உள்ள குக்கிராமங்களிலிருந்து அமிா்த கலசங்களில் மண் சேகரிக்கப்பட்டு தில்லிக்கு யாத்திரையாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
இந்த நிலையில், சென்னை ஆளுநா் மாளிகையில் உள்ள பாரதியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து கலசங்களில் சேகரிக்கப்பட்ட மண்ணை தில்லி செல்லும் குழுவிடம் ஆளுநா் ஆா்.என்.ரவி வழங்கினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
கடந்த இரு நாள்களுக்கு முன்பு மருது சகோதரா்களின் நினைவு தினத்தை கடைப்பிடித்தோம். அவா்கள் ஆங்கிலேயா்களுக்கு எதிராக போராடினாா்கள். போராட்டத்தில் வெற்றி பெற்றாலும், அவா்கள் கொல்லப்பட்டாா்கள். அவா்கள் செய்த தியாகத்தை நாம் மறந்துவிட்டோம். நமக்கு கிடைத்த சுதந்திரத்தை எளிமையாக எடுத்துக்கொண்டோம்.
ஒற்றுமையாக இருந்த நாடு இன்று பிரிவினையால் தவிக்கிறது. இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிா்களை பறிகொடுத்தோம்?
சுதந்திரத்துக்காக காமராஜா் பள்ளிப் படிப்பை கைவிட்டு போராடினாா். இதேபோன்று தமிழகத்தில் இருந்து ஏராளமானோா் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனா். அதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். திருக்கு, திருமந்திரம் குறித்தும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்தும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்
இந்த நிகழ்வில், தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் (அஞ்சல் மற்றும் வணிக வளா்ச்சி) பி.பி.ஸ்ரீதேவி, சென்னை மண்டல் அஞ்சல் துறைத் தலைவா் ஜி.நடராஜன், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டா் கே.காா்த்திகேயன், நேரு யுவகேந்திரா இயக்கத்தின் மாநில இயக்குநா் குணாமெத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...