
கருக்கா வினோத்தை 3 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக, நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை காவல் துறையினர் கைது செய்தனா்.
இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்றும், தற்போது பிணையில் வெளியே வந்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று(அக்.30) ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிண்டி காவல் துறை சார்பில் கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் வழங்கக் கோரி மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தலைமறைவு
இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றம் கருக்கா வினோத்துக்கு 3 நாள்கள் விசாரணைக் காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.