வேலையின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப
வேலையின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது


சேலம்: விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலையின்மை போன்றவற்றிற்கு காரணமான மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 

நாட்டின் நிலவி வரும் வேலையின்மை திண்டாட்டம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவசாயிகள் விளைவித்த பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழக்கிழமை நாடு முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சேலம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்தும் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விலைவாசி உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தாவசிய பொருள்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாதாகி வருகிறது. எனவே இதற்கெல்லாம் மத்திய அரசு பொறுப்பேற்று போர்கால அடிப்படையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை ஏழுப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தர்னாவில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவரை காவல்துறையினர் அதிரடியாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் காரணமாக சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் வளாக முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com