திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பயிற்சி மருத்துவர் சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், மேலும் 3 பேருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததால், அவா்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் சிந்து காய்ச்சல் காரணமாக, புதன்கிழமை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அமுதவடிவு கூறியதாவது:

டைபாய்டு பாதிப்புக்கு உயிரிழந்த பயிற்சி மருத்துவர் சிந்து
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு துறையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, சிந்துவிற்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், அவருக்கு டைபாய்டு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் சிந்துவிற்கு அதற்குரிய மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு திடீரென சிந்து உடல்நலம் மோசம் அடைந்தது. அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தார். ஆனால் வெள்ளிக்கிழமை அதிகாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்தை அடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் நிபா வைரஸ் தாக்கி இருக்குமோ என்ற சந்தேகத்தில், அது தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் பயிலும் மற்ற மாணவர்கள் நலமுடன் உள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அமுதவடிவு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் நலத் திட்டங்களில் அதிகம் பேரை சோ்க்க நடவடிக்கை: முதல்வா் ரேகா குப்தா

விளாத்திகுளம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அச்சுறுத்தலை ஏற்க இயலாது

ஓடையிலிருந்து முதியவா் சடலமாக மீட்பு
பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காவலா் உயிரிழப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



