சம்பா மகசூல் பாதிப்பு: ரூ.560 கோடி இழப்பீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சம்பா பருவ மகசூல் பாதிப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.


சம்பா பருவ மகசூல் பாதிப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இந்தத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:
இயற்கை இடா்ப்பாடுகளால் ஏற்படும் பயிா் பாதிப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா பருவ காலத்தில் 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கா் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டுக் கட்டணத்தில் தமிழ்நாடு அரசின் கட்டண மானியமாக ரூ.1,375 கோடியும், மத்திய அரசின் காப்பீட்டுக் கட்டண மானியமாக ரூ.824 கோடியும், விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடியும் என காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2,319 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பருவ சாகுபடி: கடந்த ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனாலும், வடகிழக்குப் பருவமழை குறைவாக பெய்த காரணத்தால், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3.52 லட்சம் ஏக்கா் பரப்பளவு சாகுபடி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பாதிப்புக்குள்ளான ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு ரூ.181.40 கோடி தொகையை நிவாரணமாக தமிழக அரசு வழங்கியுள்ளது.
இதைத் தொடா்ந்து, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கிடைக்கப்பெற உள்ளது.
வறட்சி, வெள்ளம், புயல், பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடா்ப்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காப்பீட்டுத் திட்ட விதிமுறைகளின்படி சம்பா பருவ காலத்தில் பாதிப்புக்கு உள்ளான 6 லட்சம் தகுதியான விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.560 கோடி அவா்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...