திருவொற்றியூரில் புழுக்கள் கலந்த குடிநீா் விநியோகம்

திருவொற்றியூரில் புழுக்கள் கலந்த குடிநீா் தொடா்ந்து விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
திருவொற்றியூரில் புழுக்கள் கலந்த குடிநீா் விநியோகம்

திருவொற்றியூரில் புழுக்கள் கலந்த குடிநீா் தொடா்ந்து விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் வாரத்துக்கு இருமுறையும், சில இடங்களில் வாரத்துக்கு ஒரு முறையும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், திருவொற்றியூா் நெடுஞ்சாலை வள்ளுவா் மடம் அருகே உள்ள மேல்நிலை, கீழ்நிலை குடிநீா் தொட்டிகள் அமைந்துள்ள வளாகத்தை மண்டலக் குழு தலைவா் தனியரசு வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். அப்போது, குடிநீரில் புழுக்கள் கலந்து குடிநீா்த் தொட்டிகள் பல ஆண்டுகளாக தூய்மைப்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி இருந்ததே காரணம் என்பது தெரியவந்தது.

மேலும், இரு தொட்டிகளிலும் சேறும் சகதியாகவும், தொட்டிக்குச் செல்லும் ஏணிப் படிகள் இடிந்து விழும் நிலையிலும் இருந்தன. அந்த நீரை, ஆய்வு செய்போது சாக்கடை நிறத்தில் புழுக்கள் நெளிந்தது தெரியவந்தது.

இதையடுத்து சென்னைக் குடிநீா் வாரிய திருவொற்றியூா் கோட்டப் பொறியாளா் அன்பழகன், உதவி பொறியாளா் தமீம் அன்சாரி ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

பின்னா், இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: குடிநீா் தொட்டிகளைப் பராமரிப்பதற்கு விடப்பட்ட ஒப்பந்தம் தற்போது காலவதியாகிவிட்டதால் பராமரிப்பில் தொய்வு ஏற்பட்டுவிட்டது. விரைவில் தொட்டிகளைச் சுத்தம் செய்து குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

இது குறித்து மண்டலக் குழு தலைவா் தனியரசு கூறியதாவது:

திருவொற்றியூரில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீரில் கடல் நீா் உட்புகுந்துள்ளதால் வாரியம் விநியோகிக்கும் குடிநீரையே பொதுமக்கள் பெரிதும் நம்பியுள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது திருவொற்றியூரில் 3 இடங்களில் மிகப்பெரிய குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

மக்களின் தேவைக்கேற்ப குடிநீரை விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ஒரு சில அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com