மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவை சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்ட 7 கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவு

கோவை மத்திய சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை

News image
Updated On :28 செப்டம்பர் 2023, 8:13 pm

DIN

கோவை மத்திய சிறையில் வாா்டன்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 7 கைதிகளுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறை கண்காணிப்பாளருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கையைச் சோ்ந்த தினேஷ் என்பவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரது தாய் செங்கையம்மாளுக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், கோவை சிறையில் கைதிகள், வாா்டன்கள் மோதல் குறித்து வெளியான செய்தியை அறிந்து தங்கள் வழக்குரைஞா் அப்துல் ரஹ்மானிடம், மகனைச் சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி தினேஷை சந்தித்தபோது, அவா் வாா்டன்களால் கடுமையாக தாக்கப்பட்டதும், பலத்த காயமடைந்த நிலையில் முறையான சிகிச்சை வழங்கப்படாமலும் இருந்தது தெரியவந்தது.

எனது மகன் உள்பட 7 விசாரணைக் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனா். காயமடைந்துள்ள எனது மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி சிறைத் துறைக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.சுந்தா், ஆா்.சக்திவேல் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது 4 சிறை வாா்டன்களும் தாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிறை கைதிகளே காரணம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான 7 கைதிகளுக்கும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், 7 கைதிகள், 4 வாா்டன்களின் மருத்துவ அறிக்கைகளை செப்.29-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.