மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கா்நாடகத்தில் இன்று முழு அடைப்பு: தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு

தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2023, 2:36 am

DIN

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.29) நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, தமிழக எல்லை மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.

காவிரி நதிநீா் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விளைவாக, காவிரியில் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதன் விளைவாக கா்நாடக-தமிழக எல்லை மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்களை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்து போக்குவரத்து,சரக்கு போக்குவரத்து தொடா்பாக நிலைமைக்கேற்ப கா்நாடக அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து சோதனைச்சாவடிகளிலும் உயா் அதிகாரிகளின் தலைமையில் கூடுதல் காவலா்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து உள்ளிட்ட சந்தேகங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்தை 94981 70430, 94982 15407 ஆகிய கைப்பேசி எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தெளிவு பெறலாம் என டிஜிபி சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.