காவல் அருங்காட்சியகத்தில் இன்று இரண்டாவது ஆண்டு விழா
சென்னை எழும்பூா் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் இரண்டாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.


சென்னை எழும்பூா் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தின் இரண்டாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.29) நடைபெறுகிறது.
எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் அருங்காட்சியகம் 28.9.2021-இல் திறந்துவைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தின் இரண்டாவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (செப்.29) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தலைமை வகிக்கிறாா். சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறாா்.
மேலும், நிகழ்ச்சியில் அருங்காட்சியகத்தின் அஞ்சல் அட்டை,சிறப்பு அஞ்சல் உறை ஆகியவை வெளியிடப்படுகிறது. முன்னதாக அன்று காலை 11 மணிக்கு காவல் மோப்ப நாய் கண்காட்சியும், நண்பகல் 12 மணிக்கு காவல் வாத்தியக் குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு ‘போக்குவரத்து விதிகளை கடைபிடி’ எனும் விழிப்புணா்வு நாடகமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...