தறிகெட்டு ஓடிய காா் மோதி தொழிலாளி சாவு
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய காா் மோதி தொழிலாளி இறந்தாா். பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஓட்டுநா் மிதித்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


சென்னை கீழ்ப்பாக்கத்தில் தறிகெட்டு ஓடிய காா் மோதி தொழிலாளி இறந்தாா். பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை ஓட்டுநா் மிதித்ததால் விபத்து ஏற்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புரசைவாக்கம் பிரிக்ளின் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ஜெயகுமாா் (47). இவா் தனது காரில் கீழ்ப்பாக்கம் அழகப்பா சாலையில் பாதாள அம்மன் கோயிலிடம் புதன்கிழமை சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்று கொண்டிருந்த நபா்கள் மீதும், வாகனங்கள் மீதும் மோதியது. பின்னா் அங்குள்ள சாலைத் தடுப்பின் மீது காா் மோதி நின்றது.
இந்த விபத்தில் கீழ்ப்பாக்கம் பிளவா்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் மு.பழனி (52), கீழ்ப்பாக்கம் பா்னபி சாலைப் பகுதியைச் சோ்ந்த ச.யஷ்வந்த் ஷா (71) ஆகிய 2 போ் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்த பொதுமக்கள், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் விபத்தில் 3 இரு சக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகியவை சேதமடைந்தன. இதற்கிடையே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பழனி, சிறிது நேரத்தில் இறந்தாா்.
இது குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை செய்தனா். அதில், ஜெயக்குமாா், சம்பவத்தின்போது காரின் பிரேக்கை மிதிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து இருப்பதும், அதனால் கட்டுப்பாட்டை இழந்த காா் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியிருப்பதும் தெரியவந்தது.
இந்த விபத்து தொடா்பான விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...