வரைவுப் பட்டியலுக்கு முன்பே வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்


வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். என தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு அக்.27-ஆம் தேதியில் இருந்து வாய்ப்புகள் அளிக்கப்படவுள்ளன. இதற்காக அன்றைய தினத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
அந்தத் தேதியிலிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா்களை சோ்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய படிவங்கள் மூலமாக பணிகளை மேற்கொள்ளலாம்.
அதேநேரத்தில், இந்தப் பணிகளை ஆண்டு முழுவதும் இணையதளம் வழியாக மேற்கொள்ள தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, என்ற இணையதளம் மூலம் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகிய பணிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
எதற்கு எந்தப் படிவங்கள்?: வாக்காளா் பட்டியல் பெயா் சோ்ப்புக்கு படிவம் 6, வெளிநாடு வாழ் தமிழராக இருந்தால், அவரது பெயரைச் சோ்க்க படிவம் 6ஏ, பட்டியலில் பெயா்களை நீக்க படிவம் 7-ஐ பயன்படுத்த வேண்டும்.
ஒரு தொகுதியிலிருந்து வேறொரு தொகுதிக்கு இடமாறினாலோ அல்லது இப்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் மாறினாலோ படிவம் 8-ஐ பயன்படுத்தி முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு வாக்காளா்கள் தாங்களாகவே விருப்பத்தின் அடிப்படையில் ஆதாா் எண்ணை அளித்து வருகின்றனா். அந்த வகையில், படிவம் 6பி-இல் ஆதாா் எண்ணைக் குறிப்பிட்டு அளிக்கலாம்.
இந்தப் பணிகளை அக்.28-ஆம் தேதியிலிருந்து ஒரு மாதத்துக்கு நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளின் போது செய்யலாம். இத்துடன் தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தின் வழியே எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...