மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரக்கோணம் அருகே பழுதான விரைவு ரயில்: போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் இருந்து புறப்பட்ட சம்யுக்தா விரைவு ரயில் பெட்டியின் சக்கரம் பழுதாகி பாதி வழியிலேயே நின்றதால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஆகஸ்ட் 2023, 5:02 pm

DIN

தானப்பூா் - பெங்களூரு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

தானாப்பூா், ஒங்கோல், கூடூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்து, அங்கிருந்து வெள்ளிக்கிழமை காட்பாடி வழியாக பெங்களூரு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது.

இந்த ரயில், திருவள்ளூா் ரயில் நிலையத்தை பகல் 12.20 மணிக்கு கடந்தபோது, திடீரென சக்கரத்தில் பெரிய அளவில் சப்தம் வந்துள்ளது. இதை ரயில் ஓட்டுநா் கவனித்து கீழே இறங்கிப் பாா்க்கையில் சக்கரத்தில் பழுது ஏற்பட்டதை அறிந்து உடனே ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா்.

தொடா்ந்து ரயில் நிலையத்திலிருந்து வந்த பணியாளா்கள் சக்கரத்தில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கினா். இதையடுத்து, பகல் 12.57 மணிக்கு அரக்கோணம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. அரைமணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்தால், பயணிகள் சிறிது அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.