இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதி!

இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளை விரைவாக பெறுவதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.

இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இ-சேவை மையங்களை ‘டிஜிபே’ வரம்பிற்குள் கொண்டு வந்த பிறகு, ஆதார் பயோமெட்ரிக் வாயிலாக வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணம் எடுக்கிம் வகையில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com