புது தில்லி: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மிக்ஜம் புயலானது தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், மிக்ஜம் புயலானது நாளை தீவிர புயலாக மாறுகிறது. இதனால், இந்த புயலின் போது காற்றின் வேகமானது மணிக்கு 90 - 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. புயல் தனது பாதையை தேர்ந்தெடுத்துவிட்டது: தமிழ்நாடு வெதர்மேன்
இது தீவிர புயலாக மாறி, செவ்வாய்க்கிழமை காலை ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளான நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் புயலானது நிலைகொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, நாளை வட தமிழகம் பகுதிக்கு வந்தடையும். பிறகு, செவ்வாயன்று காலை கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 - 90 கிலோ மீட்டர் வேகத்தில், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹிந்தி திணிப்பை கண்டித்துப் போராட்டம்: புதுவை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு
எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

ஏற்காட்டில் சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க மே 7 முதல் சிறப்புப் பேருந்து இயக்கம்

ஆன்லைன் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் 8-ஆம் வகுப்பு மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


