சற்றுநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜம்’!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சற்றுநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் ‘மிக்ஜம்’!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று முற்பகலுக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 110 கி.மீ. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது.

இந்தப் புயல் செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், இன்று முற்பகலில் தீவிரப் புயலாக மிக்ஜம் வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், இரவு வரை காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com