சென்னையில் நாளையும்(டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததாலும் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதி நாளையும்(டிச.7, வியாழக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஏற்கனவே கனமழை காரணமாக இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன்(இன்று) ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023 முதல் 6.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com