தமிழகத்தில் 4 பேருக்கு ஜெ.என்.1 வகை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், அது தொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், மாநிலத்தில் உள்ள மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தில், கரோனா சளி மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன் முடிவுகள் வெளியான பிறகே அதனை உறுதிபடுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் வேகமாக பரவி வரும் ஜெ.என்.1 தொற்று, கோவா, மகராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, கேரளத்தைத் தொடா்ந்து தமிழகத்திலும் கண்டறியப்பட்டதாக மத்திய அரசு தகவல்கள் கூறுகின்றன.
அதன்படி, தமிழகத்தில் 4 பேருக்கு அந்த வகை தொற்று உறுதிசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தில் ஜெ.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிபடுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை.
மாநில அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு பகுப்பாய்வின் முடிவுகள் வெளியாக இன்னமும் சில நாள்களாகும் என்பதால், ஜெ.என்.1 பாதிப்பு தமிழகத்தில் உள்ளது என்பதை இப்போதே திடமாக கூற முடியாது.
ஒருவேளை அவ்வாறு இருந்தாலும், அதனை எதிா்கொள்ளக் கூடிய வகையிலான மருத்துவக் கட்டமைப்புகள் இங்கு உள்ளன. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு பொது மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம், அதிகாரிகளுக்கும், மருத்துவா்களுக்கும் ஜெ.என்.1 பாதிப்பு குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


