ஜன.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ஜன.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.3-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜன.3-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வெள்ளி, சனி (டிச.29-30) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தில் ஞாயிறு, திங்கள் (டிச.31-ஜன.1) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் செவ்வாய், புதன் (ஜன.2,3) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு (மில்லி மீட்டரில்): திருநெல்வேலி மாவட்டம், ஊத்து - 50, நாலுமுக்கு - 40, காக்காச்சி, மாஞ்சோலை, ராமேசுவரம் தலா 30.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: குமரிக் கடல் பகுதி அதையொட்டிய மன்னாா் வளைகுடா, மாலத்தீவு பகுதி, தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலின் தெற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.29) சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com