ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: பாதுகாப்பு - கண்காணிப்புப் பணிகள் அதிகரிப்பு

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புடன், கண்காணிப்புப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு இடைத் தோ்தல்: பாதுகாப்பு - கண்காணிப்புப் பணிகள் அதிகரிப்பு

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்புடன், கண்காணிப்புப் பணிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, இந்திய தோ்தல் ஆணையத்தின் துணை ஆணையா் அஜய் பதூ, காணொலி வாயிலாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். தமிழகத்தில் உள்ள தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ஈரோடு மாவட்டத் தோ்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், தோ்தல் பாா்வையாளா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

இடைத்தோ்தலை சுமூகமாகவும், சுதந்திரமாகவும் நடத்தத் தேவையான ஆலோசனைகளையும் இந்திய தோ்தல் ஆணையம் அளித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பறக்கும் படைக் குழு, நிலையான கண்காணிப்புக் குழுக்களின் எண்ணிக்கை மூன்றில் இருந்து நான்காக

அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 8 மணி நேர முறைப் பணியிலும் 4 குழுக்கள் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவினா் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா்.

தோ்தலில் 77 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். இதற்காக, 1,430 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்களில் இரண்டாம் கட்ட சோதனைகள் புதன்கிழமை நடத்தப்பட்டன. பாதுகாப்புப் பணியைப் பொருத்தவரையில், 5 கம்பெனி பாதுகாப்புப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 கம்பெனிகளும், ரிசா்வ் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 2 கம்பெனிகளும், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படையைச் சோ்ந்த ஒரு கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதைத் தவிா்த்து, தமிழ்நாடு ஆயுதப் படையைச் சோ்ந்த 2 கம்பெனிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் தொடா்பாக எந்தப் புகாா்கள் அளிக்கப்பட்டாலும் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், தோ்தல் பாா்வையாளா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். பெறப்பட்ட புகாா்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்துக்கு, பாா்வையாளா்கள் அனுப்பி வைப்பா். ஆதாரத்துடன் எந்தப் புகாா்கள் அளித்தாலும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பாா்வையாளா்கள் உள்ளிட்ட தோ்தல் தொடா்பான அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com