ஈரோட்டில் காங்கேயம் காளை கண்காட்சி 

ஈரோடு ஏஇடி பள்ளி வளாகத்தில் காங்கேயம் மாடுகள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 
ஈரோட்டில் காங்கேயம் காளை கண்காட்சி 

ஈரோடு ஏஇடி பள்ளி வளாகத்தில் காங்கேயம் மாடுகள் கண்காட்சி இன்று நடைபெற்றது. 

நாட்டு மாடுகள் பாதுகாப்பு சங்க தலைவர் மோகன் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகளை உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். மாடுகள் இரண்டு வயதுக்கு உட்பட்டவை, இரண்டிலிருந்து நான்கு வயதுக்குட்பட்டவை, நான்கு வயதுக்கு மேற்பட்டவை எனபிரிக்கப்பட்டன. 

சிறந்த மாடுகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான பரிசுகள் உரிமையாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது. இது குறித்து மோகன் கூறியதாவது: 

கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்றது காங்கேயம் காளைகளாகும். இதன் இனம் சுருங்கி வருகிறது. எனவே காங்கேயம் மாடுகளை பாதுகாக்க மற்றும் அம்மாடுகளின் தன்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். 

காங்கேயம் இனத்தில் கூட பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான மாடுகளின் பாலுக்கும் தனி தனி சத்துக்கள் உள்ளன. இந்தப் பால் அதிக நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு வழங்கும். ஒரு லிட்டர் ரூ.75 லிருந்து ரூ.100 வரை விற்கப்படுகிறது. 

வெளிநாட்டு பசுக்கள் சுமார் பத்திலிருந்து பதினைந்து லிட்டர் பாலை நாள்தோறும் வழங்கும், ஆனால் காங்கேயம் பசுக்கள் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் பால் வழங்கும். பராமரிப்பு செலவு இரண்டு மாடுகளுக்கும் ஏறக்குறைய ஒன்றாகும். ஆனால் காங்கேயம் மாடுகள் வறட்சியையும் அதிக வெப்பத்தையும் தாங்கும். பலர் அதிக பால் தரும் வெளிநாட்டு பசு இனங்களை தேர்ந்தெடுக்கின்றனர். 

எனினும் நமது நாட்டின் பாரம்பரியமான காங்கேயம் பசுக்களை பாதுகாப்பதன் மூலம்நோய் எதிர்ப்பு சக்தி மிக்க சத்தான பாலை நாம் பெற முடியும். எனவே அரசும் உள்நாட்டு கால்நடைகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் கால்நடைத்துறை அதிகாரிகள் கண்காட்சியில் விவசாயிகளுக்கு காங்கேயம் மாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறந்த மாடுகளையும் தேர்வு செய்தனர்.  அதன் அடிப்படையில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன  என அவர் கூறினார். 

பேட்டியின் போது ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் டாக்டர் ரகுநாத், விவசாய சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, கால்நடை மருத்துவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com