பொங்கல் பண்டிகை: தேவைக்கேற்ப மெட்ரோ ரயில் இயக்கப்படும்!

நெரிசல் மிகுந்த நேரங்களில் நீளம் மற்றும் பச்சை வழித்தடங்களில் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
பொங்கல் பண்டிகை: தேவைக்கேற்ப மெட்ரோ ரயில் இயக்கப்படும்!


சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18-ஆம் தேதியில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் நீளம் மற்றும் பச்சை வழித்தடங்களில் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் வெளியூர் செல்வதற்கு வசதிக்காக தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும். 

வெள்ளிக்கிழமை (ஜன.13) மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நெரிசல் மிகுந்த நேரங்களில் நீளம் மற்றும் பச்சை வழித்தடங்களில் தேவைக்கேற்ப ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நெரிசல் மிகு நேரங்களான மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெள்ளி, சனி (ஜன.13, 14) மற்றும் ஜன.18 - ஆகிய தேதிகளில் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து முனையங்களிலிருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்கு பதிலாக இரவு 12 மணி வரை இயங்கும்.

மேலும், ஜன.18-ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களிலிருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கு பதிலாக காலை 4 மணி முதல் இயக்கப்படும் என வியாழக்கிழமை அறிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com