காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :20 ஜனவரி 2023, 5:49 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது. 

கடந்த டிசம்பர் மாதம் முதல் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ. 5,000 -யைத் தாண்டிய நிலையில் டிச. 14ல் ரூ. 5,100-யைத் தாண்டியது. 

கடந்த ஒரு மாதமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.  இன்று(வெள்ளிக்கிழமை) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 42,600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 35 உயர்ந்து ரூ. 5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ. 74.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 74,500-க்கும் விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.