இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடுவது  தொடர்பாக கூட்டணி கட்சியினரான தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.
இடைத்தேர்தல்: ஜி.கே.வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு!


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிடுவது  தொடர்பாக கூட்டணி கட்சியினரான தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவையடுத்து இத்தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி அணி தங்கள் தரப்பு போட்டியிடும் என்று கூறிய நிலையில் ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை நிறுத்துவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன், புகழேந்தி ஆகியோர் சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஜி.கே.வாசனை கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசி வருகின்றனர்.  

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியை சந்திக்கவுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com