சென்னை மெரினா கடற்கரையில் பேனா வடிவ சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்புக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.
தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் வரும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்கில் காலை 10.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் 137 அடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அவசியமா எனக் கேள்வி எழுப்பிய பாஜக நிர்வாகி முனுசாமியை தாக்க முயற்சி செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவாக, சென்னை மெரினா கடலில், பேனா வடிவ நினைவுச் சின்னம் ரூ.81 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேனா வடிவ நினைவிடம் முழுவதும் கடல் பகுதியில் அமைய இருப்பதால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான அனுமதி கோரி பொதுப்பணித் துறை, மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
இதையும் படிக்க: பயிற்சி ஆட்டமில்லையா, மிகவும் நல்லது: ஸ்டீவ் ஸ்மித்
அதைப் பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. பின்னா், தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியம் என தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

