
சென்னை: தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் சனிக்கிழமை (ஜூலை 1) அமலுக்கு வந்தது.
தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டில் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
இதையும் படிக்க | வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை அதிகரிப்பு!
அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 பைசா வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
வீடுகள், வேளாண், குடிசை இணைப்புகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.
கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சார சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.