மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் காரணமாக பாசன தேவை சற்று குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று இரவு முதல் வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
நேற்று காலை வினாடிக்கு 223 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 163 கன அடியாக சற்று குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.65 அடியிலிருந்து 86.77 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 49.03 டி.எம்.சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரஜினி 173-வது படத்தின் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சால்மன் மீனின் வாழ்க்கை சுழற்சியும் வலசை பயணமும்!

பிஇசிஐஎல் நிறுனத்தில் பொறியாளர், டெக்னீசியன் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? உதவித்தொகையுடன் தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் அப்ரண்டிஸ் பயிற்சி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



