எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தில்லி புறப்பட்டார் இபிஎஸ்!

பாஜக தலைமையிலான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தில்லிக்கு புறப்பட்டார்.
Published on

பாஜக தலைமையிலான கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க தில்லி  புறப்பட்டார் எடப்பாடி கே. பழனிசாமி.

பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) நடைபெறவுள்ளது. இதில் 38 கட்சிகள் பங்கேற்கவிருப்பதாக பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஆளும் கூட்டணி பலத்தை பிரதிபலிப்பதாக இக்கூட்டம் கருதப்படுகிறது.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் எதிா்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் நிலையில், அதே நாளில் பாஜக கூட்டணிக் கூட்டமும் நடைபெறுவது அரசியல் அரங்கில் எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 2019-இல் 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் அக்கூட்டணியின் முதல் கூட்டம் இதுவாகும்.

இந்த நிலையில், தில்லியில் இன்று நடைபெறும் பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லிக்கு புறப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com