தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்தது இலங்கை அரசு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜூலை 2023, 6:35 am

DIN

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஜூலை 8 ஆம் தேதி சுமார் 500க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றபோது ஜூலை 9ல் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் ஒரு படகையும் பறிமுதல் செய்தனர். 

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளனர். 

இந்த 15 பேர் மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்து கைது செய்யப்பட்டால் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்த நிலையில் இலங்கை வசம் இருந்த தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.