திமுக ஃபைல்ஸ் 2: விடியோ வெளியிட்டார் அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read


சென்னை: திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் என்று கூறி இரண்டாம் கட்ட கோப்புகளை ஆளுநரிடம் வழங்கிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அது தொடர்பான விடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில், திமுக நிர்வாகிகள் முறைகேடு செய்ததாகக் கூறி ரூ.5,000 கோடி மதிப்புள்ள 3 ஊழல்கள் தொடர்பான விளக்கத்தையும் அண்ணாமலை அளித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் சொத்து மதிப்புடன், ஆட்சியில் நடந்த மிக முக்கிய முறைகேடு என்று கூறி அது தொடர்பான கோப்புகளையும் இந்த விடியோவில் இணைத்துள்ளார் அண்ணாமலை. இதில் சொத்து மதிப்பு என்று ரூ.1343170000000 என்ற தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்காட் என்ற அரசு நிறுவனம், இடிஎல் என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியதாகவும், அந்த இடிஎல் உள்கட்டமைப்பு சேவை நிறுவனம் ரூ.3000 கோடி  அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று எப்படி பேசிக்கொள்ளும்? ஐஐடி-சென்னை சொல்கிறது

மேலும், போக்குவரத்துத் துறையில் சுமார் 2,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக விடியோவில் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். அதாவது, வணிகப் பயன்பாட்டு வாகனங்களின் மூலம் எவ்வாறு முறைகேடு நடத்தப்பட்டது என்றும், விண்ணப்பித்த ஒரே நாளில் விநியோகஸ்தர்கள் அங்கீகரிக்கப்பட்டதாகவும் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு மெடிகல் சர்வீஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ரூ.600 கோடி அளவுக்கு முறைகேடு செய்திருப்பதாகவும் விடியோவில்குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பாஜக சார்பில் நடைபெறும் பாதயாத்திரையின்போது ஊடகத்தினருக்கு விரிவாக விளக்குவேன் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார். 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கோப்புகளை வழங்கினார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பானது நடைபெற்றது.  இந்த சொத்து விவரத்தில், ரூ. 5,600 கோடி மதிப்பிலான ஊழல் விவரங்களையும் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டரில், 'இன்று, பாஜக மூத்த தலைவர்களுடன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்தித்தோம்.

ஆளுநரிடம், திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ. 5,600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக அவர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம்' என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஆளுநரிடம் அளிக்கப்பட்ட ஊழல் விவரம் குறித்த விடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com