வலுக்கும் வார்த்தைப் போர்: அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்குமா?

ஜெயலலிதா குறித்த அண்ணாமலை விமரிசனத்திற்கு அதிமுகவினர், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது கேள்வி எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெயலலிதா குறித்த அண்ணாமலை விமரிசனத்திற்கு அதிமுகவினர், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பாஜக கூட்டணியை தொடர்வது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  கூட்டம் நடைபெறவுள்ளது.

அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் உள்பட மூத்த நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறிய கருத்தால், அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் நடைபெற்று வருகிறது.

பாஜகவுடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறியுள்ளாா். இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், ஓ.பன்னீா்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோா் இணைந்து சசிகலாவை விரைவில் சந்திக்கவுள்ள நிலையில், அது தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். பணம் பெற்றுக் கொண்டு தவறு செய்தவர்களை கட்சியில் சேர்த்தவர் அண்ணாமலை. கவுன்சிலராகக் கூட அண்ணாமலை இருந்ததில்லை என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com