இத்துடன், கருணாநிதி பிறந்த இடமான திருவாரூா் மாவட்டம் காட்டூர் பகுதியில் 7 ஆயிரம் சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞா் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் வள்ளுவா் கோட்டத்தைப் போலவே, திருவாரூரில் கலைஞா் கோட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாரூா் தோ் போன்ற வடிவில் அவருக்குக் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கோட்டத்தில் அவரது உருவச் சிலை, அவரது போராட்டமிக்க பொதுவாழ்வைச் சித்தரிக்கும் அருங்காட்சியகம், அவரது தந்தைவும், என் தாத்தாவுமான முத்துவேலரின் பெயரில் நூலகம், இரண்டு திருமண மண்டபங்கள் ஆகியனவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.