கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு நாள்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கடலூா், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.