தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளராக இருந்த திலீப் கண்ணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.
தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்தவர் திலீப் கண்ணன். இவர் பாஜக தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி பதவியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
கட்சிக்காக உழைப்பவர்களை வேவு பார்க்கிறார்கள் என்றும் கனத்த இதயத்தோடு விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், திலீப் கண்ணன் அதிமுகவில் இன்று இணைந்தார்.
முன்னதாக, பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக இருந்த நிர்மல் குமாரும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பாஜகவின் இரு முக்கிய பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பாஜக ஐடி பிரிவு தலைவா் அதிமுகவில் இணைந்தாா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.