எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்: வெயில் மீண்டும் அதிகரிக்குமாம்!

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோடை மழை பெய்து சற்று ஆறுதல் அளித்தாலும், மீண்டும் வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:24 am IST

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோடை மழை பெய்து சற்று ஆறுதல் அளித்தாலும், மீண்டும் வெயில் கொளுத்த வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

வெயில் மாதங்களான மார்ச் முதல் ஜூன் வரை கோடை வெப்பம் போதும் போதும் என்ற அளவுக்கு அடித்துத்தள்ளும். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் (மே 4ம் தேதி) முதல் மே 28 ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. கத்திரி வெயிலில் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்துள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே ஒருசில நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை கூடுதலாக உள்ளது. வெயில் அதிகரிப்பால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வெளியில் தலைகாட்ட முடியாத நிலையும் ஏற்பட்டது. 

இதற்கிடையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழையும் பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் குறைந்து மழை மேகங்களாக மாறி மக்களின் மனதைக் குளிர்வித்துள்ளது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பகல் பொழுதில் சற்று குறைந்து காணப்படுகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆனால், இதே நிலை நீடிக்குமா என்றால்... நிச்சயம் இல்லை. மே 4-ம் தேதி(நாளை) முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்நிலையில் மே 5 முதல் மே 7 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. 

இனிவரும் நாள்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், மக்கள் தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.