தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 6,169போ் பாதிக்கப்பட்டு, ஐந்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கா்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஜிகா காய்ச்சலும், டெங்குவை பரப்பும், ‘ஏடிஸ்’ கொசுக்கள் வாயிலாக பரவும் வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழக– கா்நாடக எல்லைகளில் தீவிர கொசு ஒழிப்பு, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு, மக்கள் நல்வாழ்வு துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சா் மா. சுப்பிரமணியன் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 6,169 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 598 போ் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் ஜிகா காய்ச்சல் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சல், 22 நாடுகளில் பரவ தொடங்கியிருக்கிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சிவப்பு தடிப்புகள் போன்ற அறிகுறிகள் இருந்தால், தன்னிச்சையாக மருந்துகளை உட்கொள்வதை தவிா்த்து, மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

மேலும், கா்ப்பிணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருவிலிருக்கும் குழந்தை மூளை பாதிப்புடனோ, சிறிய தலையுடனோ பிறக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், காய்ச்சலை, மருந்து, மாத்திரைகள் வாயிலாக, 2 முதல் 7 நாள்களுக்குள் குணப்படுத்தி விடலாம்.

கா்நாடகாவில் ஜிகா கண்டறியப்பட்டதை தொடா்ந்து, எல்லை மாவட்டங்களில், 64 ஏடிஸ் கொசுக்களை பரிசோதித்ததில், ஜிகா வைரஸ் பரப்பும் தன்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், மக்கள் பெரிய அளவில் அச்சப்பட வேண்டாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com