தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலூர் அருகே சோகம்... மின்னல் பாய்ந்து இளைஞர் பலி

வேலூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image

மின்னல் பாய்ந்து பலியான இளைஞர் தினேஷ்

Updated On :11 அக்டோபர் 2023, 3:52 am

DIN

வேலூர் அருகே மின்னல் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம், இலத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

மழை பெய்து கொண்டிருந்தபோது இலத்தேரி அடுத்த குக்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவரின் மகன் தினேஷ் (22) தனது கூரை விட்டுனுள் இருந்த தினேஷ் மீது மின்னல் பாய்ந்ததில் உடல் கருகி தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லத்தேரி காவல் நிலைய போலீசார், அவரது உடலை மீட்டு உடல்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வீட்டில் இருந்த இளைஞர் மீது மின்னல் பாய்ந்து பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.