அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா! இபிஎஸ் கொடியேற்றினார்
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இதையொட்டி அதிமுக அலுவலகத்துக்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.
பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அதிமுக கொடியேற்றி, தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக தொடக்க விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.