எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2023, 8:27 am

DIN

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்துள்ளார். 

சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து வரும் நிலையில் அங்கு இரண்டு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு கடந்த 16- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று(வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மருத்துவக் காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது, செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சியைக் கலைக்க வாய்ப்பு இருக்கிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக நாளையே விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, வழக்கு விசாரணை வருகிற அக். 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.