ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீர் நாடாளுமன்ற கூட்டம்: முதல்வர் விமர்சனம்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு திடீரென நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு திடீரென நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சென்னையில் திமுக நிர்வாகி மனோகரன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என கூறுகிறார்கள். கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். கொள்கை குடும்பமாக இருக்கிறோம். அதுதான் முக்கியம். யார் காலிலும் தவழ்ந்து சென்று பதவியை பிடிக்கவில்லை. தமிழ்நாட்டை காப்பாற்ற எப்படி ஒரு வெற்றியை கொடுத்தீர்களோ, அப்படி ஒரு வெற்றி இந்தியாவிற்கும் தேவை. இந்தியா என பெயர் சொல்லவே பாஜக அஞ்சுகிறது. யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையால் திமுகவிற்கு மட்டுமல்ல எல்லா கட்சிகளுக்குமே பாதிப்புதான். ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது.  ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீரென நாடாளுமன்ற கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக் குழுவில் திமுக சேர்க்கப்படவில்லை. பலிகடா ஆகப் போவதை உணராமல் அதிமுக ஒரே நாடு,ஒரே தேர்தலை ஆதரிக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை எதிர்த்த அதிமுக இப்போது ஆதரிக்கிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தில் இன்னும் ஆட்சி முடியவில்லை. இன்னும் 2.5 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி உள்ள நிலையில் ஆட்சியை கலைப்பீர்களா? நாட்டின் அதிபராக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தவிர நாட்டின் நிலை குறித்து நினைக்கவில்லை. தேர்தல் செலவை குறைக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்கிறார்கள். முதலில் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். இந்தியாவையும், கழகத்தையும் காக்க நீங்கள் அனைவரும் உறுதிமொழியேற்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com