ராக்கெட் கவுன்ட் டவுனுக்கு குரல் கொடுத்துவந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வளர்மதி காலமானார்.
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட் டவுனுக்கு குரல் கொடுப்பவர் வளர்மதி (64). இவர் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 6 ஆண்டுகளாக இஸ்ரோ ஏவிய முக்கிய ராக்கெட் நிகழ்வுகளுக்கு வர்ணனை செய்து குரல் கொடுத்தவர் வளர்மதி. கடைசியாக சந்திரயான் 3 கவுன்ட் டவுனுக்கு வளர்மதி குரல் கொடுத்திருந்தார்.
படிக்க | வளர்மதி மறைவு: முதல்வர் இரங்கல்
ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த (இஸ்ரோ) திட்ட இயக்குநரான வளர்மதி பற்றி தவறான தகவல்கள் காலைமுதல் பரவிவந்தன.
இதுபற்றித் தொடர்பு கொண்டபோது, ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ கவுன்ட் டவுன் அறிவிப்பாளராக இருந்த வளர்மதிதான் காலமானார். தான் நலமாக இருப்பதாகவும், தன்னைப் பற்றி ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்றும், தான் வேறு வளர்மதி, இறந்தது வேறு வளர்மதி என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உளவாளியாக நடிக்கும் தனுஷ்?

புதிய புரட்சி! விஜய்க்கு வாழ்த்துக்கள்! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

