போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

வரும் செப்.16-ல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:14 pm

DIN

வரும் செப்.16-ல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

என்.எஸ்.சி. போஸ் சாலை, தங்க சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருடசேவைக்கு தமிழகத்திலிருந்து செப்.16-ஆம் தேதி திருக்குடைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

அந்தவகையில், நிகழாண்டு திருப்பதி திருக்குடை ஊா்வலம் சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து செப்.16-ஆம் தேதி காலை 10.31 மணிக்கு புறப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.