இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாபநாசத்தில் செல்போன் வெடித்து பெண் பலி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே  செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
கோகிலா
Updated On :27 செப்டம்பர் 2023, 12:53 pm

DIN

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே  செல்போன் வெடித்ததில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே அருகே ஆடுதுறை, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார். 

இவர் கபிஸ்தலத்தில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார். கோகிலா புதன்கிழமை வழக்கம் போல் கடைக்கு வந்து தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். 

அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது. இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து,  கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது.

பின்னர், கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.