உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்: யார் தெரியுமா?

போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர்கள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்: யார் தெரியுமா?
Published on
Updated on
1 min read

உலக பணக்காரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 200 இந்தியர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் இடம்பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார் என இங்கு பார்ப்போம்.

ஷிவ் நாடார்:

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஷிவ் நாடார் உலக பணக்காரர்கள் பட்டியலில் 39-வது இடத்தில் உள்ளார். இந்தியாவில் 3-வது இடம். 78 வயதான இவரின் சொத்து மதிப்பு 34.6 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய மதிப்பில் ரூ. 2.5 லட்சம் கோடி.

ஸ்ரீதர் வேம்பு சகோதர்கள்:

ஸோகோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவின் சகோதர் மற்றும் சகோதரி பில்லியனியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அவரது தங்கையான ராதா வேம்பு உலகளவில் பணக்காரர் பட்டியலில் 949-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.3 பில்லியன் அமெரிக்க டாலர். (ரூ.24 ஆயிரம் கோடி)

அதே போல சகோதரர் சேகர் வேம்பு, 2.5 பில்லியன் சொத்து மதிப்போடு (ரூ.18,500 கோடி) உலகளவில் 1330 இடத்தில் உள்ளார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள்: யார் தெரியுமா?
உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்!

கலாநிதி மாறன்

இந்தியளவில் 82-வது இடத்தில் உள்ள கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலராக (ரூ. 22,200 கோடி) உள்ளது. இவரது தொலைக்காட்சி குழுமம் இந்தியா மட்டுமில்லாது 27 நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

வேணு ஸ்ரீநிவாசன்

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் தலைவரான வேணு ஸ்ரீநிவாசன், இந்தியளவில் பணக்காரர்கள் பட்டியலில் 95-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 26 ஆயிரம் கோடி ரூபாய்.

சுரேஷ் கிருஷ்ணா

சென்னையை மையமாக கொண்ட சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்தின் தலைவரான சுரேஷ் கிருஷ்ணாவின் சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 9 ஆயிரம் கோடி. டிவிஎஸ் குழுமத்தின் மூன்றாம் தலைமுறை உறுப்பினர் சுரேஷ் கிருஷ்ணா. தற்போது இவரது மகள்கள் சுந்தரம் பாஸ்ட்னர்ஸின் தலைமைப் பொறுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com