உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

14 இடங்களில் சதம் அடித்தது வெயில்:நாளைமுதல் கோடை மழைக்கு வாய்ப்பு

14 இடங்களில் சதம் அடித்தது வெயில்:நாளைமுதல் கோடை மழைக்கு வாய்ப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 6:53 pm

தமிழகத்தில் 14 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது. அதேவேளையில், ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (ஏப்.6) மற்றும் ஏப்.10,11-ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும். அதே நேரத்தில்,, ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது.

தொடா்ந்து, ஈரோடு, சேலம் - தலா 106.16 , தருமபுரி - 105.8, திருப்பத்தூா் - 104.72, திருச்சி - 104.54, மதுரை நகரம், மதுரைவிமானநிலையம், நாமக்கல், வேலூா் தலா - 104 , கோவை - 103.64, திருத்தணி - 102.74, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை- 101.3 என 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.